களைகட்டும் உள்ளாட்சித் தேர்தல் 99 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..!!

 

-MMH

       கோவை மாநகராட்சியில் தற்போது 100 வார்டுகள் உள்ளன அதில் அரசியல் கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களில் போட்டியிடுகின்றனர் .தற்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் சுயேட்சை வேட்பாளரும் பம்பரமாக சுழன்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.கோவை மாநகராட்சியில் வார்டு 99ல் வரவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் குலையுடன் கூடிய தென்னைமரம் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக திரு.K.சின்னராசு என்பவர் போட்டியிடுகின்றார். குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் K.சின்னராசு அவர்கள் அந்தப் பகுதி மக்களின்  நன்கு பரிச்சயமான ஒருவராக உள்ளார். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை முன்னின்று எதிர் கொள்ளும் சமூக ஆர்வலராகவும் உள்ளார்.

99வது வார்டில் சுயச்சை வேட்பாளராக குலையுடன் கூடிய தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடும் K.சின்னராசு அவர்களை கவுன்சிலர் பதவிக்கு மக்கள் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிப்பேன் என்றும் மேலும் 99வது வார்டில் உள்ள குடிநீர் பிரச்சனை, சாக்கடை கால்வாய் பிரச்சனை, தெருவிளக்கு அமைப்பது மற்றும் பராமரிப்பது, குண்டும் குழியுமான சாலைகள் சீர் செய்து போன்ற அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக தீர்த்து வைப்பேன் என்று கூறுகிறார். ஒரு கவுன்சிலராக என்னால் மக்களுக்கு என்னென்ன சேவைகள் செய்ய முடியுமோ அனைத்து வேலைகளையும் நேரம் காலம் பார்க்காமல் சிறப்பாக செயல்பட்டு செய்து கொடுப்பேன் என்றும் கூறுகிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

நிருபர்கள்

-ஈஷா. சி.ராஜேந்திரன்.

Comments