கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானத்தில் காய்கறி ஏற்றுமதி!!

 

-MMH

கோவை ஷார்ஜா இடையே  ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது.வாரம் 7 நாட்களும் இயக்கப்பட்டு வந்த இந்த விமானம் கொரோனா காரணமாக தற்போது 5 நாட்கள் இயக் கப்படுகிறது. இந்த விமானத்தில் 168 பயணிகளுடன் 3.5டன் கார்கோ எடுத்து செல்லப்படுகிறது. நடப்பு மாதம் இந்த விமானத்தில் காய்கறி மட்டும் அதிகளவு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறிய தாவது கோவை ஷார்ஜா இடையே இயக்கப் படும் விமானத்தில் காய்கறி, காஸ்டிங்ஸ் போன்ற தொழிற்சாலை சார்ந்த கார்கோ எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த மாத துவக்கத்தில் இருந்து  புடலங்காய், கொத்த வரங்காய், கருணைகிழங்கு, பாகற்காய், வெண்டைக்காய், சின்ன வெங்காயம், கோவக்காய், முருங்கைக்காய் போன்றவை அதிகளவில் அனுப்பப்படுகின்றன.

காய்கறி அனைத்தும் தேனி, திண்டுக்கல், ஒட்டன் சத்திரம் பகுதியில் இருந்து கோவைக்கு கொண்டுவரப் பட்டு, இங்கிருந்து ஷார்ஜா வுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப் படுகின்றன என  அவர்கள் தெரிவித்தனர். மேலும் அதிக அளவில் காய்கறிகள் ஏற்றுமதி செய்வதால் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments