குடிபோதையில் வாலிபர் கைது!!

   -MMH 

    கோவை போத்தனுார் அடுத்த கோணவாய்க்கால்பாளையம் போயர் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி, 34; கட்டுமான தொழிலாளி. இவரும், இவரது நண்பர் சரவணனும், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள உணவகம் முன் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது குடிபோதையில் வந்த டேவிட் ராஜா, 24 கந்தசாமி என்பவரிடம் தகராறு செய்தான் இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. டேவிட் ராஜா, நெஞ்சில் தாக்கியதில் கந்தசாமி மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். விசாரித்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய, கூலித்தொழிலாளி டேவிட் ராஜாவை கைது செய்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments