முல்லைப் பெரியாறு ஆற்றில் புதிய அணை ஆளுநர் அறிவிப்பு - காங்கிரஸ் வெளிநடப்பு!!

   -MMH 

 கேரளா சட்டசபையில் இன்று ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையின் போது  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்றும் முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நீர் வழங்குவதில் எந்த பிரச்சனையும்  இல்லை என்றும் தெரிவித்தார். 

அதேசமயம் முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவோம் என்று தீர்மானமாக தெரிவித்த ஆளுநர் இது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கேரளா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே புதிய அணை கட்டுவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் சட்டசபையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின்   சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆளுநர் உடந்தையாக இருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் முழக்கங்கள் எழுப்பினர் பின்பு ஆளுநர் உரையை புறக்கணித்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments