புதிய தொழில் நுட்பத்துடன் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்த தேர்தல் அதிகாரிகள்!!

 

-MMH

     கோவை மாவட்டத்திலுள்ள பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க, முதல்முறையாக 'ரியல் டைம் மானிட்டரிங் சிஸ்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது.கோவை மாவட்டத்தில் மொத்தம், 2,303 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் கோவை மாநகராட்சி பகுதியில், 169 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டது.

நகராட்சிகளில், 112, பேரூராட்சிகளில், 143 என மொத்தம் மாவட்டம் முழுவதும், 424 பதட்டமான ஓட்டுச்சாவடிகளாக கண்டறியப்பட்டன.இந்த ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை நேரலை செய்ய, கோவை கலெக்டர் அலுவலகத்தில் முதல்முறையாக 'ரியல் டைம் மானிட்டரிங் சிஸ்டம்' அமைக்கப்பட்டிருந்தது.

ஒரே இடத்தில் இருந்து பதட்டமான, 424 மையங்களில் நடக்கும் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்பட்டது. அங்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில், தேர்தல் கண்காணிப்பு மையத்துக்கு தகவல் அளிக்கப்படும். அவ்வாறு தகவல் கிடைத்தால், உடனடியாக குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிக்கு செல்ல தனி குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.பதட்டமான ஓட்டுசாவடிகளில், தேர்தல் சிறப்பு பார்வையாளர் நாகராஜன், கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments