காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் திட்டத்தின் மூலம் வார்டு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வேன்!! -மக்கள் நீதி மய்யம் கட்சியின் கவுன்சிலர் வேட்பாளர்

   -MMH 

  கோவை:தான் வெற்றி பெறும் பட்சத்தில் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் திட்டத்தின் மூலம் வார்டு மக்களின் குடிநீர் தேவையை  பூர்த்தி செய்வேன் என்று  கோவை 63 வது வார்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் கவுன்சிலர் வேட்பாளர் ரம்யா வேணுகோபால் உறுதி அளித்துள்ளார். 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட  63வது வார்டு பகுதியில் திமுக அதிமுக மக்கள் நீதி மையம் மற்றும் சுயச்சை  வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக அவ்வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடக்கூடிய வேட்பாளரான ரம்யா வேணுகோபால் தனது பகுதியில் பரப்புரையை  மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக பசும்பொன் நகர்  பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் விரைந்து செயல்படுவேன் என்று உறுதியளித்து வாக்கு சேகரித்து வருகிறார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் திட்டத்தின் மூலம் வார்டு மக்களின் குடிநீர் தேவையை  பூர்த்தி செய்வேன் என்று உறுதி அளித்தார். இத்திட்டத்தை வெற்றியடைய செய்து மக்கள் பயன் பெற அனைத்து விதமான பணிகளையும் மேற்கொள்வேன் என்றும் ரம்யா வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments