ஏப்ரல் 1ம் தேதி முதல் கோவையில் இருந்து ஜபல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்!!

   -MMH 

    கோவையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். ஜபல்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு ரத்னகிரி, மட்கோன், கண்ணூர்,சொர்ணுர்,பாலக்காடு வழியாக 3வது நாள் மதியம் 2.40 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடையும்.

இதேபோன்று கோவையில் இருந்து ஏப்ரல் 4ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, சொர்ணுர், கண்ணூர், மட்கோன்,ரத்னகிரி வழியாக 3வது நாள் காலை 8.45 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும்.

ரெயிலில் முதல் வகுப்பு ஏ.சி பெட்டி ஒன்று, ஏ.சி இரண்டடுக்கு பெட்டி 2, ஏ.சி மூன்றடுக்கு பெட்டி 5, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி 11, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டி 2 என இயக்கப்படுகிறது.இதற்கான முன்பதிவு தற்போது துவங்கி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments