முதல் பெண் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்!!

   -MMH 

  திருவனந்தபுரம்:  கேரளாவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதல் பெண் டிரைவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கேரளம் மாநிலத்தில் விபத்துகளால் பாதிக்கப்படும் மக்களின் உயிர்காக்கும் பணியில், '108' ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது.

இவற்றில், ஆண்கள் மட்டுமே டிரைவர்களாக உள்ளனர்.இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த தீபாமோள் என்பவர், ஆம்புலன்ஸ் டிரைவராக நேற்று நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும், ஆர்வமுள்ள பெண்களை ஆம்புலன்ஸ் டிரைவர்களாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கேரளா மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments