சூப்பர் வுமன் அவார்ட்ஸ் 2022, சுமார் 30 பெண்களுக்கு வழங்கப்பட்டது!!

    -MMH 

   கோவை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்ற, சூப்பர் வுமன் அவார்ட்ஸ் 2022, சுமார் 30 பெண்களுக்கு வழங்கப்பட்டது.

சந்திரன் யுவா  பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் ஆண்டு தோறும், பெண்களை பெருமைபடுத்தும் வகையில் பல்வேறு விருதுகளை வழங்கி வருகின்றது, இதன் ஒரு பகுதியாக மார்ச் 8, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐந்தாம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது  பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பென்களை பெருமைபடுத்தவும், பெண்கள், இச்சமுதாயத்தில் தடையின்றி முன்னேறி வரவும் சாதனையாளர் விருதாக வழங்கபட்டது.

இந்த சாதனை முயற்ச்சியில், மருத்துவதுறையில் தடம் பதித்த, ராவ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஆஷா ராவ், மாவட்ட வருவாய்  அலுவலர் ப்பி லீலா அலேக்ஸ், சந்திரன் யுவா பவுண்டேஷன் இயக்குனர் காயத்ரி நடராஜன், மார்ட்டின் குழுமங்களின் தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின், ரோட்டரி ஆப் ஆக்ருதி தலைவர் கவிதா கோபாலகிருஷ்ணன், சந்திரன் யுவா பவுண்டேஷன் இயக்குனர், மருத்துவர் கங்கா, போன்ற பல்வேறு சாதனை படைத்த பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்க பட்டது இதனை தொடர்ந்து இவ்விழாவின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்திரன் யுவா பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் சசிகலா கூறுகையில்,

"உலக மகளீர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு திறமை வாய்ந்த பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கபட்டு வருகின்றது, இந்த விருதில் விவசாய துறையில் சாதிக்கும் பெண்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் சமுக ஆர்வலர்கள், தொழில் துறையில் சாதிக்கும் மகளிர்க்கு இவ்விருதுகள் வழங்க பட்டு வருகின்றது, சாதனை செய்த பெண்களுக்கும், சாதிக்க துடிக்கும் பெண்களுக்கும் வழங்கி வருவதாக தெரவித்தார், இச்சமுதாயத்தில் போராடும் பெண்கள் அனைவருக்கும், உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவு கூறவே இது பொன்ற நிகழ்ச்சிகள் நடத்தபடுவதாக தெரவித்தார் பெண்களுக்காக பல்வேறு வகையில் பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும், மேலும் பெண்களுக்கு உதவிகள் புரிய ஆர்வமுள்ளவர்கள்  எங்களை தொடர்பு கொள்ளலாம் எப்போதும் அவர்களுக்கு சந்திரன் யூவா பவுண்டேஷன் துனை நிற்க்கும்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments