மார்ட்டின் அறக்கட்டளை 22ம் ஆண்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழாவில் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் பங்கேற்பு! - பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது!!

   -MMH 

   கோவை மார்ட்டின் அறக்கட்டளை 22ம் ஆண்டு விழா மற்றும்  உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்! டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் பங்கேற்பு!.

மார்ட்டின் அறக்கட்டளை 22ம் ஆண்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு சாதனை பெண்களுக்கு விருது மற்றும் நலத் திட்டம் வழங்கும் விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் கிளப்பில்  காலை  நடைபெற்றது. நிகழ்ச்சியை கோயம்புத்தூர் மேயர் கல்பனா ஆனந்த்குமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மார்ட்டின் அறக்கட்டளை நிறுவனர் ரோட்டேரியன் ஏ.கே எஸ். டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரோட்டேரியன் சாந்தி சந்திரசேகர், குமரேசன், உதவி ஆளுநர் கணேஷ்குமார், ஜெகநாதன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் ஆக்ருதி தலைவர் கவிதா கோபாலகிருஷ்ணன், செயலாளர் சப்னா சாஜத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மார்ட்டின் அறக்கட்டளை அறக்கட்டளையின் 22 ம் ஆண்டு விழா மற்றும் மகளிர் தின விழாவில் பாளையசக்கரபட்டி அண்ணாமலை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பழங்குடி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் பேட்டரி கார் வழங்கப்பட்டது. மற்றும் பெஸ்ட் அண்ட் கோ மகளிர் கபடி வீராங்கனைகளுக்கு கல்லூரி கட்டணமாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டது. மார்ட்டின் பவுண்டேஷன் மூலம் ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி கட்டணமாக ரூ.52 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், பொற்கொள்ளார் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்திற்கு தையல் மெஷின் வழங்கப்பட்டது.  மகளிர் ஆட்டோ டிரைவர்கள், கார் டிரைவர்கள் , செவிலியர்கள் ,ஜி.கே.என்.எம் மருத்துவமனை டாக்டர்கள்,நர்சுகள், புலியகுளம் காவல் நிலைய காவலர்கள் உள்ளிட்ட 101 பேருக்கு  சாதனையாளர் விருதுகளை மார்ட்டின் அறக்கட்டளை நிறுவனர் ரோட்டேரியன் ஏ.கே எஸ். டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கி கவுரவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments