வாணியம்பாடி அருகே பல்வேறு இடங்களில் கொள்ளை அடித்த 27 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.2 பேர் கைது!!

    -MMH 

   வாணியம்பாடி அருகே பல்வேறு இடங்களில் கொள்ளை அடித்த 27 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.2 பேர் கைது.

வாணியம்பாடி மார்ச் 15 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அலசந்தாபுரம் பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு தையல் கலைஞ்சர் குமரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் தங்க நகைகளை  மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

சம்பவம் குறித்து குமரன் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவந்த வந்தனர். 

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த காட்வின் மோசஸ், சந்திரமோகன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திம்மாம்பேட்டை பகுதியில் குமரன் உட்பட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து கொள்ளையடித்த 27 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். 

சம்பவம் தொடர்ந்து திம்மாம்பேட்டை போலீசார் இருவரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

-ரமேஷ், வேலூர்.

Comments