கண் பார்வை இழப்பை தடுக்க 'தி ஐ பவுண்டேஷன்' சார்பாக அதன் அனைத்து கிளைகளிலும் மார்ச் 7 முதல் 13 ஆம் தேதி வரை இலவச பரிசோதனை!!

 -MMH 

 கண் பார்வையில் முக்கிய குறைபாடாக கருத்தப்படும் குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயைக்  ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ,கண் பார்வை இழப்பை தடுக்க  தி ஐ பவுண்டேஷன் சார்பாக அதன் அனைத்து கிளைகளிலும் மார்ச் 7 முதல் 13 ஆம் தேதி வரை இலவச பரிசோதனை செய்யப்படும் என்று அம்மருத்துவமனையின் இயக்குனர், டாக்டர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பிரபல கண் மருத்துவமனையான தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ராமமூர்த்தி,உலக முழுவதும் குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் குறித்த உலக குளுக்கோமா வாரம் கொண்டாடப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, தி ஐ பவுண்டேஷன் சார்பில் குளுக்கோமா வாரம் கொண்டாடப்படும் என்றும், அந்த வாரத்தில்     குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயைக்  ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ,கண் பார்வை இழப்பை தடுக்க  தி ஐ பவுண்டேஷன் சார்பாக பொதுமக்களுக்கு, மருத்துவமனையின் அதன் அனைத்து கிளைகளிலும் மார்ச் 7 முதல் 13 ஆம் தேதி வரை இலவச பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக குளுக்க்கோமா வாரம் கொண்டாப்படுவதும் குறித்தும் ,அந்த நோயின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் குறித்த விழிப்புணர்வையும்  பொதுமக்களுக்கு  தி ஐ பவுண்டேஷன் தொடர்ந்து  மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments