வியாபாரிகள் சங்கத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா..!!

 
  -MMH 

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அதிகளவில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். அதை தொடர்ந்து கடந்த மார்சு2ஆம் தேதி கவுன்சிலர்கள் பதவி ஏற்றார்கள், அதை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடத்தி வருகின்றனர். 

தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்டம், போத்தனூர் கிளை சுந்தராபுரம் பகுதியில் உள்ள சம்மேளனம் அலுவலகத்தில்  மாமன்ற உறுப்பினர்களை அழைத்து பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் மாமன்ற உறுப்பினர்கள்.

99 - மு.அஸ்லாம் பாஷா

100 - கார்திகேயன்

98 - உதயகுமார்

85 - சரலா வசந்து

94 - தனலட்சுமி

95 - SA காதர்

96 - குனசேகரன்

ஆகிய மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் குறிச்சி பிரபாகரன், 99வது வட்ட செயளாளர் முஹம்மது ஜின்னா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களை தமிழக வியாபாரிகள் சம்மேளனம் நிர்வாகிகள் கலந்து கொண்டவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்.

நாளை வரலாறு செய்திகளுக்காக,

-சையது காதர் குறிச்சி.

Comments