கோவையில் வருமானவரித்துறை ரெய்டு யார் யார் சிக்கினர்?

   -MMH 

     கோவையில் வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்லம் உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லம் மற்றும் அதிமுகவினரின் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் இல்லம் உட்பட தமிழகத்தில் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதன்படி சென்னையில் 8 இடங்களிலும், கோவையில் 41 இடங்களிலும் சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கலில் 1 இடத்திலும், கிருஷ்ணகிரியில் 1 இடத்திலும், திருப்புத்தூரில் 2 இடம் உடபட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலுமணியின் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோவையில் மட்டும் 35 இடங்களில் சோதனை நடைபெற்றது.

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

அதே போல் கோவை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள், சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகளில் தேவையான தொகையை விட அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டு மோசடிகள் நடந்துள்ளதாக ஏற்கனவே புகார்கள் கூறப்பட்டன.

அப்போது லஞ்ச ஒழிப்பு சோதனையில் 13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வேலுமணி உள்பட 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

எஸ் பி வேலுமணி அவர்களின் வீட்டில் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில் 58.24 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்படும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

மேலும் கடந்த 10 நாட்களில் மலேசியா தாய்லாந்து போன்ற பல வெளியூர்களுக்கு எஸ் பி வேலுமணி அவர்கள் பலமுறை சென்று வந்துள்ளார் ஆகையால் ஏதேனும் வெளி ஊரில் சொத்து வாங்கி வைத்துள்ளாரா என்று சந்தேகம் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

-பாஷா,ஹனீப்,சுரேந்தர்.

Comments