சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் வனத்துறையினர் எச்சரிக்கை!

 

-MMH     கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை  மங்கரை ஒட்டக்கரடு பகுதியிலுள்ள விவசாயி ரவிக்குமார் என்பவர் தோட்டத்தில்  கடந்த 8ஆம் தேதி இரவு மர்ம விலங்கு ஒன்று அவரது ஆட்டு பட்டியில் புகுந்து 8 ஆடுகளை கடித்துக் கொன்றது. 

இதுகுறித்து ரவிக்குமார் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் தகவலறிந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு மர்ம விலங்கினை கண்டறிய இரு குழுக்கள் நியமனம் செய்து கண்காணிப்பு கேமரா பொருத்தி அப்பகுதியை  கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட பொழுது சிறுத்தை ஒன்று நடமாடுவது தெரியவந்துள்ளது இதனை அடுத்து சிறுத்தையை பிடிக்க இரு கூண்டுகள் வைத்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர் மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments