விபத்தை தடுக்கும் வகையில் மாற்றப்படுமா அம்பராம்பாளைம் வாரச்சந்தை..!!

   -MMH 

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் உள்ள அம்பராம் பாளையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வார சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வார சந்தை இதற்கு முன்பு சிங்காநல்லூர் செல்லும் சாலையில் நடைபெற்று வந்தது. 

வார சந்தைக்கு வரும் பொதுமக்கள் தாங்கள் வரும் வாகனங்களை சாலையில் நிறுத்தி சென்றதால் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும்  அந்த வார சந்தையை பொள்ளாச்சி மற்றும் திருச்சூர் மெயின் ரோட்டில் சில வருடங்களுக்கு முன் மாற்றினார்கள் அதன் பின் சாலை விரிவாக்கப் பணிகளினால் சாலை அகலப்படுத்த பட்டது.

இந்த சூழ்நிலையில் சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சந்தையின் முன்னுள்ள சாலையின் இருபுறங்களிலும்  நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது மேலும் கேரளாவுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதுபோன்று வாகன நெரிசல் அதிகமுள்ள சாலைகளில்  பொருட்களை வாங்கிக்கொண்டு சாலையை கடந்து செல்லும்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

ஏற்கனவே இந்த இடத்தில் சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. எனவே பெரிய விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்படுவதற்கு முன்பாக இந்த சந்தையை வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நீண்டநாள் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளதால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அலாவுதீன் ஆனைமலை .

Comments