தலைக் கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு காதில் பூ வைத்து நூதன முறையில் விழிப்புணர்வு !!

    இன்று வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ் நாடு அரசு பள்ளி கல்வி துறை வேலூர் மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர்  பெ.குமாரவேல் பாண்டியன் IAS அவர்கள், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன்.MLA ,வேலூர் மாநகர மேயர் திருமதி.சுஜாதா ஆனந்தகுமார் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்து வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணியாத அவர்களுக்கு காதில் பூ வைத்து நூதன முறையில்  விழிப்புணர்வு செய்தார்கள். இதில் பல்வேறு அரசு துறை  அதிகாரிகள்  கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.

-ரமேஷ்,வேலூர்.

Comments