கோவையில் அதிகரிக்கும் பைக் திருட்டு!!

   -MMH 

   கோவை: ரகுமான், 32. இவர் ரங்கேகவுடர் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் விற்கும் கடை ஒன்றில், பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, ராஜவீதி, ஐந்து முக்கு பகுதியில்  உள்ள தான் வந்த பைக்கை வீட்டுக்கு அருகில் நிறுத்திவிட்டு அருகே  உள்ள கடை உரிமையாளரை பார்க்க சென்றார். பின் திரும்பி வந்து பார்த்தபோது பைக் மாயமாகியிருந்தது. அங்கிருந்த சி.சி.டிவி., காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரு வாலிபர்கள் பைக்கை திருடிச்சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில், இதுகுறித்து வெரைட்டி ஹால்ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டிவி., காட்சிகளை வைத்து, வாலிபர்களை தேடி வருகின்றனர். இதுபோன்ற பைக் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி தொடர்ந்து நடைபெறுவதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments