முதியவர் தற்கொலை ஊர் மக்கள் அதிர்ச்சி..!!

   -MMH 

  கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சியில் குடும்ப பிரச்சினை காரணமாக பஞ்சலிங்கம் (63) என்பவர் வீட்டின் முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக மாட்டு வியாபாரம் செய்துவந்தார். இந்நிலையில் இன்று காலை சுமார் நான்கு மணி அளவில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குவேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Comments