எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார்!!

   -MMH 

  கோவை: நடைபெற்ற மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம்  ஜனநாயக  முறையில் நடத்தவில்லை என்றும், குதிரை பேரத்துக்கு இத்தேர்தல் வழிவகுத்த தாகவும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் நடைபெற உள்ள ஹிஜாப் மாநாட்டிற்கு வருகை தந்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அக்கட்சியின் தலைமை அலுவலகமான கோட்டை வீதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இருப்பதால் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் எந்த மொழியிலும் திரையிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் இத் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுமானால்  திரையரங்குகளை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சி மிகப் பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் நெல்லை முபாரக் கூறினார். தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் சிறுபான்மை மக்களான முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டிப்பதாக குற்றம் சாட்டிய அவர், முஸ்லீம் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழக ஐஐடி கல்வி நிலையத்தில் மத, சாதிய வெறுப்பை களைய குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், 38  முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

வெள்ளலூர்‌ தேர்தல் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டிருப்பதாகவும் இவ்விவகாரத்தையும் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலை நேர்மையாக நடத்தவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது போன்ற ஜனநாயக மாண்பின் மீறி நடத்தப்படும் தேர்தல்களில் குதிரை நேரத்திற்கு மட்டுமே வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முஸ்தபா மண்டல தலைவர் ராஜா உசேன் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர் மாவட்ட துணைதலைவர் சிவக்குமார் மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம் மாவட்ட செயலாளர்கள் முகமது இசாக் மாவட்ட செயலாளர் ஹுசைன் மாவட் செயற்க்குழு உறுப்பினர் சுல்தான் மாவட்ட வர்த்தக அணி தலைவர் அப்துல் ரஹிம் மாவட்ட தொழிற்ச்சங்க தலைவர் ரபீக் தொகுததி தலைவர்கள்:- உம்மர் ஷெரீப், சதகத்துல்லாஹ், அப்துல்ரஹ்மான், மன்சூர் செய்தி தொடர்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments