கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு !

-MMH

   கோவை, மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பத்மாவதி, 54. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு உறவினர் வீட்டின் நிகழ்விற்கு கலந்து கொண்டு பின்பு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார் அவர் சரவணம்பட்டியில் இருந்து கீரணத்தம் செல்லும் ரோட்டில் உள்ள தனியார் பல் மருத்துவமனை அருகே செல்லும்போது, அதே வழியில், பைக்கில் வந்த இருவர் பத்மாவதி அணிந்திருந்த மூன்று சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயின் பறித்த நபர்களை தேடி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments