அதிமுகவில் மீண்டும் சசிகலா டி.டி.வி தினகரன் சேர்க்க வலியுறுத்தி ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

   -MMH 

  முக்கிய செய்தி 

அதிமுக வில் மீண்டும் சசிகலா டி.டி.வி தினகரன் சேர்க்க வலியுறுத்தி ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அவரது பண்ணை வீட்டில் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சையது கான் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வி. கே சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர்களை எவ்வித நிபந்தனை இன்றி கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை அடுத்து வருகின்ற 5 -ந் தேதி மாவட்ட கூட்டத்தில் முறைப்படி தீர்மானம் நிறைவேற்ற முடிவு  செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை, நஜீம் பெரியகுளம் .

Comments