தெற்காசிய சிலம்பம் போட்டியில் பங்கேற்க பெரியநாயக்கன்பாளையம் பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்!!

     -MMH 

   பெ.நா.பாளையம்:தெற்காசிய சிலம்பம் போட்டியில் பங்கேற்க பெரியநாயக்கன்பாளையம் பள்ளி மாணவி பிரதீபா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜி.எஸ்.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ், 1 மாணவி பிரதீபா.

இவர் கன்னியாகுமரி சி.எஸ்.ஐ., ஹாலில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் சீனியர் பிரிவு குழு ஆயுத வீச்சு போட்டியில் பங்கேற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இவர், இந்தியா சார்பாக தெற்கு ஆசியா சிலம்பம் போட்டியில் பங்கேற்க உள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி தாளாளர் விசாலாட்சி, செயலாளர் சஞ்சீவ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

-சுரேந்தர்.

Comments