ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய ஈஷா!

-MMH

    ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் ஏழை மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்காக ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. தாணிக்கண்டி, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, மடக்காடு, மத்வராயபுரம், ஆலாந்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 23 மாணவிகள் மற்றும் 4 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படித்த இம்மாணவர்கள் ஈஷாவின் உதவியுடன் பொறியியல், நர்சிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்ட படிப்பை தொடர உள்ளனர்.

இந்நிகழ்ச்சி ஆதியோகிக்கு செல்லும் வழியில் இருக்கும் சிவாங்கா குடிலில் நடைபெற்றது. இதில் போளுவாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர். சதானந்தம் அவர்கள் பங்கேற்று கல்வி உதவி தொகைகளை வழங்கி வாழ்த்து கூறினார். ஈஷாவின் கல்வி உதவி தொகையின் மூலம் பட்டப் படிப்பை முடித்து தனியார் நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments