கோவை குனியமுத்தூரில் ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது!!

    -MMH 

   கோவை குனியமுத்தூரில் ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது.

உணவு கடத்தல் தடுப்பு போலீசார் கோவை குனியமுத்தூர் பாலக்காடு சாலையில் நேற்று வாகன சோதனை நடத்தினர் அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார் அவரை  பிடித்து  சோதனையிட்டபோது அதில் 200 கிலோ ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.அரிசியை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், கார்த்திக், அவரது நண்பர் குனியமுத்துாரை சேர்ந்த பிச்சைமுத்து,42, உடன் சேர்ந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கேரளா மாநிலத்துக்கு கள்ள சந்தையில் விற்க முயன்றது தெரியவந்தது மேலும் அவர்களிடமிருந்து பதுக்கி வைத்த 900 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.

கார்த்திக் பிச்சமுத்து இருவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments