டீ, காப்பி, தக்காளி சாதம் ரிப்பீடு-எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு..!!

   -MMH 

   கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டபோது தொண்டர்கள் குவிந்த போது டீ, காபி, டிபன் வழங்கப்பட்டது போல், தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் மதியம் தொண்டர்களுக்கு தக்காளி சாதம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 2015-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை 58 கோடியே 23 லட்ச ரூபாய் முறைகேடாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதாவது வருமானத்தை விட 3928% சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்.

ஹனீப்.

Comments