அடுக்குமாடிக் கட்டடத்தில் பிற்பகலில் பயங்கர தீ விபத்து!!

   -MMH 

   சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தகவல்தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து நேரிட்ட கட்டடத்தில் சிக்கியிருந்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை.

Comments