விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையங்களின் அனைத்து பணிகளும் முடிவற்றது!!

 -MMH 

சென்னை மெட்ரோ இரயில் திட்டம், கட்டனம் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ், வண்ணாரப்பேடை முதல் விம்கோ நகர் வரை (9 கி.மீ) பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையங்களின் அனைத்து பணிகளும் முடிவற்றது. 

மற்றும் மெட்ரோ இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததின் பேரில், அவ்விரு மெட்ரோ இரயில் நிலையங்கள் இன்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது என்றும், இவ்விரு மெட்ரோ இரயில் நிலையங்களிலும் மெட்ரோ இரயில்கள் இன்று முதல் நின்று செல்லும் என்று அறிவிக்கப்படுகிறது. திருவொற்றியூர், விம்கோ நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் பொதுமக்கள், மேற்கண்ட இரயில் நிலையங்களில் மெட்ரோ இரயில் சேவையைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையத்தில் இம்மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம். 

-கார்த்திகேயன், தண்டையார் பேட்டை.

Comments