வேலூர் மாநகராட்சி 1வது வார்டு மக்கள் மனகுமுறல்!

   -MMH 

   வேலூர் 1வது வார்டு தேர்தல் முடிந்த தருவாயில் மக்களின் மனக்குமுறலை சொல்ல முடியாமல் மவுனமாக இருக்கின்றனர்.

இதில் இராஜிவ்காந்தி நகர் மக்களின் நிலை படு மோசமாகி விட்டது. 4 மாசத்துக்கு முன்னாடி இந்த பகுதியில் ரோடு போட ஜல்லி கொட்டி, இப்போ வரைக்கும் ரோடு போடல.

இந்த ரோடு போட மாட்டாங்கன்னு அதிமுக வேட்பாளர் அப்பவே சொன்னத மக்கள் நம்பல. இப்போ ரோடு கேட்க முடியாம மக்கள் மவுனமாக இருகுறதுல மர்மம் இருக்கு. தேர்தலுக்கு ஓட்டு போட காசு, முக்கியமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு தனி கவனிப்பு இவைகள்தான்  மவுனதின் காரணம்.

இந்த இராஜீவ் காந்தி நகரில் இருந்து ஒருவர் பாஜ கட்சியில் மாகராட்சி தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்து இருக்கிறார். அவர் பின்னணியில் இருப்பவருக்கு அதிகாரிகளை செயல்பட வைக்கும் திறன் இருக்கிறது. அந்த பின்னணி நபர் மூலம்தான் பாஜ கட்சிக்காரர் செயல்படுவதாக மக்கள் சொல்றாங்க. ஆனால் பாஜ கட்சி நபரும் ரோடு பத்தி கண்டுக்காம இருக்கார். இதுக்கும் காரணம் இருக்குனு மக்கள் சொல்றாங்க. பாஜ கட்சி சார்பில் போட்டியிட்டவரின் பின்னணியில் இருப்பவர் சற்று நேர்மையானவர்.

தேர்தல் நேரத்திலேயே பாஜகாரர் பின்னணியில் இருப்பவர் கழட்டி விட்டு போயிட்டார்நு அந்த எரியா மக்கள் கிட்ட புலம்ப தொடங்கிய கதை நடந்து இருக்கு. நேர்மையானவர் எதுக்கு அவரை கழட்டி விட்டார்னு  மர்மம் சீக்கிரம் விலகும். அதேபோல பின்னணியில் இருக்கும் நேர்மையான அந்த நபரும் அந்த பகுதியை சே்ந்தவர் தான். அவரும் ரோடு பிரச்னையில் எதுக்கு கண்டுக்காம இருக்கார்ன்னு மர்மம் விலகவே இல்ல.

மொத்தத்துல ஜல்லி பாதையில் மக்கள் விழுந்து எழுந்து சத்தம் இல்லாம வீட்டுக்கு போயிட்டு இருக்கிறாங்க. காசு வாங்கிட்டு ஓட்டு போட்டா என்ன கதினு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் புரின்ஜிகிட்டாங்க.

-P. இரமேஷ், வேலூர்.

Comments