பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு ரூ 20 ஆயிரம் அபராதம்! வேலூர் மாநகராட்சி மேயர் நடவடிக்கை!

-MMH

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு 20 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுத்துள்ளார். வேலூர் மாநகராட்சி சுண்ணாம்புகாரதெரு, லாங்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மேயர் சுஜாதா நேற்று ஆய்வு செய்தார்.அப்பொழுது சுண்ணாம்புகார தெருவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.இதையடுத்து அந்த கடைகளுக்கு 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.அதேபோல் மற்ற ஐந்து கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பத்தாயிரம் என்று மொத்தம் ஆறு கடைகளுக்கு 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.இதை அடுத்து கிருபானந்த வாரியார் சாலையில் நடைபாதையில் ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்ற உத்தரவிட்டார்.பின்னர் நடைபாதைகளில் கடைகள் வைத்து விட்டால் அங்குள்ள கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மேயர் எச்சரித்தார். தொடர்ந்து வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு முடிக்காமல் இருந்து அதனை நாளைக்குள் சரி செய்ய உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது மண்டல குழு தலைவர் நரேந்திரன் உதவி கமிஷனர் வசந்தி இளநிலை பொறியாளர் மதிவாணன் சுகாதார அலுவலர் லூர்துசாமி உட்பட மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர். 

-P. இரமேஷ் வேலூர்.

Comments