நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் 21-ந் தேதி முதல் இயக்கம்

 

-MMH

   கோடைகால விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வியாழக்கிழமைதோறும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வியாழக்கிழமைதோறும் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம்- நெல்லை இடையே வெள்ளிக்கிழமைதோறும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 22-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வெள்ளிக்கிழமைதோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை வந்தடையும்.

இந்த ரெயில்கள் சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ெரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 1 ரெயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்படும். இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

நாளைய வரலாறு  செய்தியாளர்

-அன்சாரி நெல்லை.

Comments