ட்ரு வேல்யு ஹோம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், 25வது ஆண்டு விழா!!

    -MMH 

   டிவிஹெச் என்றழைக்கபடும் ட்ரு வேல்யு ஹோம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை கொண்டாடபட உள்ளது.

கோவை, திருச்சி சாலை, இராமநாதபுரம் பகுதியில், உள்ள டிவிஹெச், என்றழைக்கப்படும் ட்ரு வேல்யு ஹோம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தின் 25 ஆண்டு விழா வை முன்னிட்டு பலுவேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக இன்று, இராமநாதபுரம் பகுதியில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக இந்த நிறுவனத்தின் இயக்குநர் மணிவண்ணன் தெரவித்துளார், மேலும் இது குறித்து அவர் கூறும்போது...

டிவிஹெச் நிறுவனம், 1997 ம்ஆண்டு துவங்க பட்டு, 25 ஆண்டுகளை தாண்டி சென்று கொண்டுள்ளது இதனை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும், வரும் 9,ம்தேதி மற்றும் 10 ம்தேதி சம்மர் நைட்ஸ் என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, சிவாங்கி, சமையல் கலைஞர் தாமு, இசை கலைஞர்கள் சாம், விஷால், நகைசுவை நடிகர்கள், அசார் மற்றும் டிஎஸ்கே, கலந்து கொள்ள இருப்பதாகவும், இங்கு பொதுமக்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில், 55 ஸ்டால்கள் இடம் பெற உள்ளது, அதில் பாரம்பரிய உணவுகளை உண்ணும் வகையில் 15 ஸ்டால்கள் இடம் பெற உள்ளதாக தெரவித்தார், இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க படுகின்றதாக தெரவித்தார், மதியம் 3 மணி முதல், இரவு 11 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார், போதுமக்கள் கலந்து கொள்ள கட்டணமாக 100 ருபாய்க்கான, டிக்கெட்கள் நிர்ணயம் செய்துள்ளதாகவும், பொதுமக்கள் பயணடைய வேண்டும் என்றும் கேட்டு கொண்டார், கொரோனா தொற்றை கடந்து வந்த நிலையில் கோவையில், நடைபெறும் முதல், பெரிய நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமைய உள்ளது எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரவித்தார், கட்டுமான தொழிலில், நமது நிறுவனத்தின் பங்கு குறித்த செய்தியாளர் கேள்விக்கு.

வரும் காலங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து, பல்வேறு அடுக்குமாடி கட்டடங்களையும், வீடுகளையும் வழங்க டிவிஹெச் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, என்றும், எழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் வீட்டு மனைகள் இடம் பெற்றுள்ளதாகவும், தற்பொது, திருச்சிசாலை, பாப்பம்பட்டியிலும், மேட்டுப்பாளையம் சாலையிலும், சத்தி சாலையிலும், மேலும்  பல்வேறு பகுதிகளிலும் வீடுகளையும், வீட்டுமனைகளையும், பொதுமக்கள் வாங்கி பயனடையும் வகையில் வழங்க உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments