கோவை கணபதி பகுதியை சேர்ந்த 34 வயது வாலிபரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு!!

 

-MMH

   கோவை கணபதி பகுதியை சேர்ந்த 34 வயது வாலிபரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம், செல்போனை பறித்ததாக, கோவைநகரில் உள்ள கல்லூரி மாணவர்கள் பிரசாந்த் (19), நிஷாந்த் (21 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மாணிக்கம் (20) என்பவர் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் இந்த கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சேர்ந்து ஐடி ஊழியர் ஒருவரையும் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம், செல்போன் பறித்தது தெரியவந்துள்ளது. கோவை காந்திபுரம் அலமு நகரை சேர்ந்த 31 வயதான அந்த ஐடி நிறுவன ஊழியரை செல்போனில் தொடர்பு கொண்டு ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். ஐடி ஊழியர் அங்கே சென்றபோது அவரை உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி செல்போன், ரூ.5 ஆயிரத்தை 3 பேரும் பறித்துள்ளனர்.

இது தொடர்பாக ஐடி ஊழியர் சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிந்து பிரசாந்த், நிஷாந்த் ஆகியோரை கைது செய்தனர். மாணிக்கம் தேடப்பட்டு வருகிறார். கைதாகியுள்ள பிரசாந்த் பிகாம் 3ம் ஆண்டும், நிஷாந்த் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டும் படிக்கின்றனர். இவர்கள் 3 பேரிடம் மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் ஓரினச்சேர்க்கை ஆசையில் பணம், பொருட்களை இழந்திருக்கலாம் என தெரிகிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் சந்திக்க, பேச பிரத்யேக செயலி உள்ளது. இதில் எங்கே? எப்போது? எப்படி சந்திக்கலாம்? என்ற விவரங்களை பகிர்ந்து வருகின்றனர். இளம் வயதினர் மட்டுமின்றி வயதான நபர்களும் ஓரினச்சேர்க்கை ஆர்வத்தில் நகரில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களிலும், ஓட்டல்களிலும் சந்திப்பதாக கூறப்படுகிறது. இவர்களிடம் பறித்த பணத்தை வைத்து மது போதையில் ஜாலியாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

-சுரேந்தர்.

Comments