திருவண்ணாமலை 6 டன் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது !

   -MMH 

    திருவண்ணாமலை  அருகே மூன்று சரக்கு வாகனங்களில் நாமக்கல்லுக்கு 6 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த கொளக்குடி கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, நாமக்கல் மாவட்டத்திற்கு சரக்கு வாகனங்களில் கடத்திச் செல்ல இருப்பதாக வெறையுர் காவல்துறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொளக்குடி கிராமத்தில் வெறையூர் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்பொழுது சந்தேகிக்கும் படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 சரக்கு வாகனங்களை சோதனையிட்டதில் 6 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 வாகனங்களில் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.அதில் திருவண்ணாமலை திருவள்ளூர் தெருவில் வசிக்கும் பிச்சாண்டி (46) என்பவர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து கடத்தி வந்ததும் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கழிகுளம் கிராமத்தை சேர்ந்த சிவா (24), திருவண்ணாமலை அடுத்த சோ. கீழ் நாச்சிபட்டு கிராமத்தை சேர்ந்த மயில்சாமி (38),ஆனந்தன் (32 )ஆகியோர் சரக்கு வாகன ஓட்டுநர் என்பது தெரியவந்தது.இதையடுத்து 6 டன் ரேஷன் அரிசி 3 சரக்கு வாகனங்கள் மற்றும் பிடிபட்ட 4 பேரையும் திருவண்ணாமலை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் வெறையுர் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர் மேலும் 6 டன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

-P. இரமேஷ் வேலூர்

Comments