72 வருடமாக வெறும் மண் மற்றும் சாம்பலை சாப்பிடும் பாட்டி!!
உலகத்தில் நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்று உணவாகும். அவ்வாறு உணவு இல்லை என்றால் நம்மால் உயிர்வாழ முடியாது.
இதில் சில பேருக்கு இனிப்பான உணவு பிடிக்கும், சிலருக்கு கசப்பான உணவு பிடிக்கும். ஆனால் ஒரு பாட்டி வினோதமான ஒன்றை சாப்பிட்டு வந்துள்ளார். அது என்னவென்றால் உத்திரபிரதேசத்தில் உள்ள குஷ்மா டாட்டி என்ற ஒரு பாட்டி 72 வருடமாக வெறும் மண் மற்றும் சாம்பலை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் சிலர் எதற்காக இதை சாப்பிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பாட்டி நான் 18 வயதாக இருக்கும்போது ஒரு சாமியார் என்னிடம் வந்து இதுதான் சாப்பிட வேண்டும் என்று சொன்னார்கள் என்று கூறினார். மேலும் அந்த பாட்டி என்னால் ஒரு நாள் கூட இந்த மண்ணையும், சாம்பலையும் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இதையடுத்து இந்த பாட்டியை மருத்துவர்கள் சோதித்துப் பார்த்தபோது அவரின் உடலில் ஐயன் சக்தி குறைவாக இருந்தது. இதனால் தான் பாட்டி மண் மற்றும் சாம்பலை சாப்பிடுவதாக மருத்துவர்கள் கூறினார்கள். அவ்வாறு இருக்கும்போது இந்த பாட்டி நாளொன்றுக்கு 2 கிலோ வரைக்கும் மண் மற்றும் சாம்பல் சாப்பிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-சுரேந்தர்.
Comments