வரும் 8ம் தேதி கோவை வரும் 3 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

 

-MMH

   கோவை:ஓமலூர் – மேட்டூர் இடையே ரெயில்வே பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மூன்று ரெயில்கள் ஏப்ரல் 8ம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி பெங்களூருர்- எர்ணாகுளம் விரைவு ரெயில் (எண்:12677) பெங்களூரு-சேலம் ரெயில் நிலையம் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயங்காமல் மாற்று பாதையான கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை,இதன  காரணமாக ஒசூர்,தர்மபுரி நிலையங்களுக்கு இந்த ரயில் செல்லாது.குப்பம்,மேக்னசைட் ரெயில் நிலையம் வழியாக ஏப்ரல் 8ம் தேதி இயக்கப்படும்.

அதேபோல எர்ணாகுளம்-பெங்களூர் விரைவு ரெயில் (எண்: 12678) மற்றும் கோவை – லோக்மான்யாதிலக் விரைவு ரெயில் (எண்: 11014) ஆகிய ரெயில்களும் பெங்களூர்-சேலம் ஜங்ஷன் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயக்காமல் மாற்றுப்பாதையான கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், மேக்னசைட் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments