சாலை ஓரத்தில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளால் பொதுமக்கள் அதிர்ச்சி..!!

 

   -MMH 

   கோவை போத்தனூர் செட்டிபாளையம் மற்றும் கஞ்சி கோணம் பாளையம் செல்லும் பாதைகளில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை  சாலை ஓரங்களில் கொட்டி செல்கிறார்கள், 

சாலை யோரங்களில்  மலைபோல டன் கணக்கில் குவியல் குவியலாக கொட்டப்பட்டது காணமுடிகிறது, 

 பல்வேறு இடங்களில் கட்டிடங்களை புதுப்பிப்பதற்காக அகற்றப்படும் பழைய கட்டிட கழிவுகளையும் கொட்டிச்செல்கின்றனர், இதனால் குப்பை மேடாக காணப்படுவதாகவும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர் சாலையின் நடுப்பகுதி வரை இந்த கழிவுகள் சரிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகம்:

கட்டிட கழிவுகள் கொட்டுவதற்கு  கோவை உக்கடம் பகுதியில் மாநகராட்சிக்கு  சொந்தமான இடம் உள்ளதாகவும், இந்த இடத்தில் கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கு மாநகராட்சி முறையாக அறிவிப்பு பலகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  என்றும் அவ்வாறு செய்தாள் கோவை மாவட்டம் தூய்மையாக காணப்படும் என்று  பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா, செய்யது காதர் குறிச்சி.

Comments