மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் !!

-MMH

 கோடைகால விடுமுறையையொட்டி தெற்கு ரெயில்வே வாராந்திர சிறப்பு ரெயிகளை அறிவித்துள்ளது. இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதன்படி 06030 என்ற எண்ணுள்ள சிறப்பு ரெயில் வருகிற 21-ந் தேதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. இந்த ரெயில் கோவைக்கு காலை 6.25 மணிக்கு வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 22-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு 06029 என்ற எண்ணுள்ள வாராந்திர ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, கோவைக்கு இரவு 8.35 மணிக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது. இந்த ரெயில் கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழ் கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி வழியாக சென்று நெல்லையை சென்றடைகிறது.

குளிர்சாதன வசதி பெட்டிகள்-3, 2-ம் வகுப்பு பெட்டிகள்-7, 3-ம் வகுப்பு பொதுபெட்டிகள்-2 என இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த தகவலை ரெயில்வேதுறை தெரிவித்துள்ளது. கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு லிங்க் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட இந்த ரெயில், தற்போது கொரோனா பரவல் குறைந்தும் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது. இந்த ரெயிலை விரைந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments