பேருந்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது!!

-MMH

  கோவை நியூசித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டை சேர்ந்தவர் மோகன்குமார்(20). இவர் காந்திபுரத்தில் உள்ள செல்போன் மொத்த விற்பனை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வாடிக்கையாளர் ஒருவரின் முகவரிக்கு 7 புதிய செல்போன்களை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஆனைகட்டிக்கு புறப்பட்ட அரசு பஸ்சில் அனுப்பினார்.ஆனால் செல்போன்கள் வாடிக்கையாளருக்கு சென்று சேரவில்லை.  தான் அனுப்பி வைத்த செல்போன்கள்  திருட்டுப் போனதை அறிந்த மோகன் குமார் காட்டூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.மோகன்குமார் கொடுத்த புகாரில் காட்டூர்  போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த பாஸ்கரன்(28)  என்பவன் செல்போன்களை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments