தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல - தமிழக அரசு அறிவிப்பு!!

  

    கொரோனா நோய்த்தொற்று  கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில் தமிழக அரசு தற்போது தடுப்பூசி செலுத்தி கொள்வது இனி கட்டாயமல்ல என அறிவித்துள்ளது.

அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முகக் கவசம் அணிவதும் தனி மனித இடைவெளி பின்பற்றுவதும் பொதுமக்களின் விருப்பம்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் இனி தாமாக முன் வந்து அதை செலுத்திக் கொள்ளலாம். அதாவது இனி கொரோனா தடுப்பூசி என்பது கட்டாயமல்ல அதே சமயம் பொது மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-M.சுரேஷ்குமார்.


Comments