கோவை ஜெம் மருத்துவமனையில் ஆசனவாய் தொடர்பானநோய்களுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை மையம் துவக்கம்!!

    -MMH 

    கோவை ஜெம்  மருத்துவமனையில் ஆசனவாய்தொடர்பான நோய்களுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை மையம் துவக்கம்!!தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் . கீதாலட்சுமி  துவக்கி வைத்தார்.

ஜெம்  மருத்துவமனை ஆசனவாய் தொடர்பானநோய்களுக்கான குறைந்தபட்ச அணுகல்  அறுவைசிகிச்சைக்கான சிறப்பு மையத்தினை  கோயம்புத்தூரில் துவங்கியுள்ளது.குறைந்தபட்சஅணுகல் அறுவை சிகிச்சை மூலம் ஹெபடோ பிலியரி, உணவுக்குழாய், பெருங்குடல் மற்றும்பேரியாட்ரிக் போன்ற சிகிச்சை நோய்களை சரி செய்வதில் உலகிலேயே புகழ்பெற்றமருத்துவமனையாக ஜெம்  மருத்துவமனைவிளங்குகிறது. தற்போது கூடுதலாக ( minimallyinvasive proctology ) குறைந்தபட்ச அணுகல் புரோக்டாலஜி எனும்  சிகிச்சை மூலம் ஆசனவாய் தொடர்பான  மூலவியாதி,பிளவு மற்றும் பவுத்திரம் போன்றநோய்களுக்கான சேவையையும் வழங்குகிறது.பொதுவாக மூல வியாதி,பிளவு மற்றும் பவுத்திரம் போன்ற  பிரச்சனைகள் தற்போது அதிகரித்து வருகின்றன.மேலும்வழக்கமான  சிகிச்சை முறைகளில் கடுமையான வலி, வேலைக்கு விடுப்பு , மெதுவாககுணமடைதல் மற்றும் மீண்டும் நிகழ்வதற்கான வாய்ப்பு போன்ற இடர்கள் அதிகம் . (minimallyinvasive Surgical proctology)  குறைந்தபட்ச அணுகல் அறுவை சிகிச்சை புரோக்டாலஜி சிகிச்சை ( உயர் வரையறை ) Highdefinition வீடியோ ரெசெக்டோஸ்கோப், புதிய லேசர் தொழில்நுட்பம், மூலவியாதிசிகிச்சைக்கான கருவிகள் ,  பௌத்திரம்  சிகிச்சைக்கான 3 மிமீ  ஃபிஸ்துலோஸ்கோப் ( 3mm  fistuloscope   ) மற்றும் (pilonidal sinus treatment)  பைலோனிடல் சைனஸ் சிகிச்சை-யுடன்  துவங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு பேசிய சிறப்பு விருந்தினர் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் . கீதாலஷ்மி ஜெம் மருத்துவமனையின் இம்முயற்சியை பாராட்டினார்.மேலும் அவர் பொதுமக்கள் அறுவை சிகிச்சையினால் வரும் வலிமற்றும் மீண்டும் நிகழும் வாய்ப்பு போன்ற காரணங்களால் மருத்துவரின் ஆலோசனையை பெறதயங்குகின்றனர். ஜெம் மருத்துவர்கள் அந்த தடைகளை போக்குவதாக கூறினார். இந்திய  பெருங்குடல் அறுவை சிகிச்சைசங்கத்தின் பொது செயலாளர்  டாக்டர் கௌஷல் மிட்டல் பேசுகையில், குறைந்தபட்ச அணுகல் அறுவைசிகிச்சை வலியின்மை , மிக வேகமாக குணமடைதல்மற்றும் குறைந்த மறு நிகழ்வு போன்ற சிறப்புகளை கொண்டுள்ளது .குறைந்தபட்ச அணுகல்அறுவை சிகிச்சையில் புதிய சிகிச்சை முறைகள் லிஃப்ட் & லேசர் போன்றவைகளை  பயன்படுத்தி செய்கையில் மீண்டும் நிகழ்வதற்கானவாய்ப்புகள் மிகவும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். குறைந்தபட்ச அணுகல் அறுவை சிகிச்சையில் காயங்களும் அதிகம் ஏற்படும் வாய்ப்புஇல்லை. இந்த சிகிச்சை முறை குறைந்த செலவில் தனி மனிதனுக்கு கிடைப்பதோடுமட்டுமின்றி நாட்டிற்கே பெரிய பொருளாதார பயன்களை தருகிறது.ஜெம்  மருத்துவமனை இது தொடர்பான பயிற்சிவகுப்புகளையும் மருத்துவர்களுக்கு வழங்குகிறது , என இந்த சிகிச்சையின் பயன்கள் ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். C . பழனிவேலு விளக்கினார்.இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் விழாவில் கலந்து கொண்டு சங்க தமிழ்நாடுபிரிவு தலைவர் டாக்டர்.செல்வராஜ் அவர்களை பெருமைபடுத்தினர். ஜெம் மருத்துவமனையின்பெருங்குடல் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்.பார்த்தசாரதி,  டாக்டர். ராஜபாண்டியன் டாக்டர். ஹரிஷ் ஆகியோர் பல்வேறு  குறைந்தபட்சஅணுகல் சிகிச்சை முறையில் மூல வியாதி,பிளவு மற்றும்பௌத்திரம் சிகிச்சை செய்து காட்டிவிளக்கினார். குறைந்தபட்ச அணுகல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர்.செந்தில் கணபதி விழாவில்கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments