பதட்டமில்லாமல் திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள்!!

   -MMH 

    கோவை அருகே அடகு கடையில் நுழைத்து இருவர் நகை இருப்பதாக நினைத்து பெட்டி ஒன்றை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர். அவர்களை அந்த வழியாக வந்த இளைஞர்கள் வழிமறுத்து கேள்வி எழுப்பியதால் பெட்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அப்பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவில் அடகுக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த இரு கொள்ளையர்கள் அடகு கடையில் வைத்திருந்த நகைப் பெட்டியை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர்.

அவ்வழியே இருவர் இரு சக்கர வாகனத்தில் வருவதைப் பார்த்து பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்து சந்தேகம் அடைந்த இருவரும், ஹலோ நீங்கள் யார்? இதென்னபெட்டி? உள்ளே என்ன இருக்கு என விசாரித்துள்ளனர். அதற்குப் பதில் அளிக்காமல் நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென கொள்ளையர்கள் பெட்டியை அங்கேயே விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

கொள்ளையர்கள் பெட்டியை தூக்கி செல்லும் காட்சிகள் சிசிடிவில் பதிவாகியுள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடையின் உரிமையாளர் அந்த பெட்டியில் நகைகளின் ரசீதுகள் மட்டுமே அதில் வைத்திருந்தார். இதனால், நகைகள் தப்பியது.

-சுரேந்தர்.


Comments