கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் நியூக்ளியர் ஸ்கேன் மையம்!!

   -MMH 

  கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் நியூக்ளியர் ஸ்கேன் மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் நியூக்ளியர் மருத்துவம், கதிரியக்க மருந்துகளைக் கொண்டு உடல் உறுப்புகளின் நோயின் நிலை குறித்து அறியும் சிறப்பு மருத்துவமாகும்.

நியூக்ளியர் ஸ்கேன்ஸ் மூலம் நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சிகிச்சையின் விளைவுகளை துல்லியமாக கண்டறிய முடியும். இதன் எளிய செயல்முறைகள் பல வகையான நோய் மற்றும் உடல் குறைபாடுகளை கண்டறிய உதவுகிறது. நியூக்ளியர் ஸ்கேன்ஸ் பல மருத்துவ சிறப்பு துறைகளில் நாள்தோறும் பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய மருத்துவ மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், பீளமேடு பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் துவக்கி வைத்து பார்வையிட்டார். பி.எஸ்.ஜி., நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

-சுரேந்தர்.

Comments