சங்கம்பாளையத்தில் மத்திய அரசின் விவசாய நல திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது..!!

   -MMH 

   மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் பற்றி கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பாக விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில் கோவை தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக   நேற்று பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சங்கம் பாளையத்தில்  மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வு நடைபெற்றது.

அப்பொழுது அந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் விவசாய திட்டங்களான 

1)விவசாயிகள் கெளரவ நிதி உதவி திட்டம்

2) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்

3) விவசாயி கடன் அட்டை மற்றும்

4) பிரதம மந்திரி வேளாண் நுண்நீர் பாசன திட்டம் மற்றும்

5) மண்வள அட்டை

6) (கறவை மாடுகளுக்கான காப்பீட்டு திட்டம்) போன்ற பல்வேறு திட்டங்களை பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு  ஒன்றிய தலைவர் சுரேந்தர் முன்னிலை வகித்தார்வேங்கைசெல்வபிரபு பொறுப்பு வகித்தாா் இதில் கோவை தெற்கு மாவட்ட பாஜக விவசாயி அணி   மாவட்ட செயலாளா் விஜயகுமாா் மத்திய அரசு திட்டங்கள் பற்றி  சிறப்புறை நிகழ்தினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய விவசாய அணி தலைவா் ஜெகதீஸ் தலைமை வகித்தார் இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்   C. கோபால கிருஷ்ணன் மாவட்ட விவசாயஅணி பொது செயளாலா்கள் சிவமுருகாணந்தம், கண்டீஸ்வரன் மண்டல ஓபிசி அணி தலைவா்  பச்சமுத்துபோன்றோர்  கலந்துகொண்டனா். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments