செயல்படாமல் உள்ள மொபைல் போன் டவர், எந்த நேரத்திலும் கீழே விழுவதற்கு வாய்ப்பு!!

   -MMH 

   மேட்டுப்பாளையம்:  செயல்படாமல் உள்ள மொபைல் போன் டவர், எந்த நேரத்திலும் கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.சிறுமுகை பாரதி நகரில், மையப்பகுதியில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஏர்செல் மொபைல் போன் நிறுவனம், டவர் அமைத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏர்செல் நிறுவனம், மொபைல்போன் சேவையை நிறுத்தியது.சில ஆண்டுகளாக இந்த வளாகத்தை சுத்தம் செய்யாததால், மரங்களும், செடிகளும், கொடிகளும், புதர் போல் வளர்ந்துள்ளன.சிறுமுகை பேரூராட்சி துணை தலைவர் செந்தில்குமார், பாரதி நகர் பொதுமக்கள் ஆகியோர் கூறியதாவது:பாரதி நகரில் ஏர்செல் மொபைல் போன் நிறுவனம், 200 அடி உயரத்திற்கு டவர் அமைத்துள்ளது. இதன் வளாகத்தில் ஜெனரேட்டர், எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகிய அமைக்கப்பட்டுள்ளன.இந்த நிறுவனம் தனது சேவையை நிறுத்தியதை அடுத்து, இந்த மொபைல் போன் டவரை, பராமரிக்க யாரும் வருவதில்லை. அதனால் வளாகம் முழுவதும் புதர் மண்டி உள்ளது.

மேலும் டவரை இழுத்து தாங்கிப் பிடிக்கும் கம்பிகளில், கொடிகள் சுற்றி உள்ளன.பலமான காற்று வீசும் போது, இந்த டவர் அசைந்தாடுகிறது. அதனால் எந்த நேரத்திலும் டவர் கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த விபத்தால் உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த டவரை அகற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக, இந்த டவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறினர்.

-சுரேந்தர்.

Comments