கோவை வ உ சி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் ஆரோக்கியமாக உள்ளது!! - மாநகராட்சி சுகாதார குழு தலைவர்.
கோவை வ உ சி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் ஆரோக்கியமாக உள்ளது எனறு மாநகராட்சி சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் பேட்டி..!!
கோவை வ உ சி உயிரியல் பூங்காவில், கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன்Mc தலைமையில், சுகாத குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு உள்ள பறவைகள், மான்கள், பாம்புகள், முதலைகள் மற்றும் பல்வேறு உயிரினங்களின் நிலை குறித்து வனத்துறை மருத்துவர் செந்தில்நாதனிடம், சுகாதார குழு தலைவர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பல்வேறு ஆலோசனை வழங்கிய சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.
பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
"தமிழகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகின்றது. கோவை வ உ சி உயிரியல் பூங்கா 1965 ல் துவங்கப்பட்டது. இங்கு பறவைகள், பாம்புகள், குரங்குகள், முதலைகள் என 400 க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளது. இது கோவையின் அடையாளமாக திகழ்வதாகவும், விலங்குகள் பறவைகளை பார்த்து மாணவ மாணவிகள் மிகவும் பயனடைந்தனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக இந்த பூங்கா மூடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சையது காதர் குறிச்சி.
Comments