பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!!

    -MMH 

   மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றது. தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளியவர், இரவு முழுவதும் மக்களுக்கு ஆசி வழங்கி, பின்னர் நூபுரகங்கை தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட அழகர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு இன்று அதிகாலை 03.00 மணிக்குத் தங்கக்குதிரையில் ஏறி வைகை ஆற்றுக்கு புறப்பட்டார் கோாிப்பாளையம் வழியாக ஆழ்வாா்புரம் பகுதி வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி அதிகாலை 5.50 மணிக்கு இறங்கி எழுந்தருளினார் கள்ளழகர்.

கள்ளழகரை எதிர்சேவை கொண்டு வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி வரவேற்றாா் வீரராகவ பெருமாள். கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கிய காட்சியை பல லட்சக்கணக்கான பக்தா்கள் தீர்த்தவாரி செய்து பரவசத்துடன் பாா்த்து தரிசித்தனா். 

கள்ளழகரை காண மதுரை,திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வைகை ஆற்றங்கரையில் நேற்று இரவு முதலே பக்தா்கள் குவிந்திருந்ததால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.


-கலையரசன்,மகுடஞ்சாவடி.


Comments