"சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பெற்ற வெற்றி போல, வரும் சட்டமன்ற தேர்தல்களில், குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடரும்" - ஆம் ஆத்மி கட்சி"

 -MMH 

ஆம் ஆத்மி கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகம் கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் துவங்கப்பட்டது.ஆம் ஆத்மி கட்சியின் முதல் அலுவலகமாக கோவையில் துவங்கப்பட்ட இதற்கான துவக்க விழாவில், மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் அரசியல் கட்சிகள்  மாற்றத்தை தருவதாக கூறினாலும்,அதற்கு இணையாக எந்தவித மாற்றங்களும் இல்லாமல் இருப்பதால்,மக்கள் ஏற்கனவே உள்ள கட்சியினருக்கு வாக்களிப்பதாக கூறிய அவர்,தற்போது அந்த நிலை மாறி அரவிந்த் கெஜ்ரிவாலின் செயல்பாட்டால், மக்கள் ஆம் ஆத்மி கட்சியை நோக்கி வருவதாக தெரிவித்தார். 

தொடர்ந்து அவர்,தமிழக முதல்வரே டெல்லிக்கு சென்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சாதனையாக பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனைகள் இயங்குவதை பார்த்தாக கூறிய அவர்,எனவே ஊழலில்லாத,கடன் இல்லாத,மக்களின் நலன் காக்கும்  அரசாக டில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் செயல்பட்டதன் விளைவாகவே பஞ்சாப்பின் வெற்றி என குறிப்பிட்ட அவர்,இந்த வெற்றி தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தல்களில், குஜராத்,இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், தாமோதரன், ஜோசப்ராஜா, வேல்முருகன்மகளிரணி டெல்லி மேரி, கோவை மாவட்ட தலைவர் வாமன், ஒருங்கிணைப்பாளர் டோனிசிங் உட்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments