பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!!

   -MMH 

   கோவை பீளமேட்டில் பைக்கில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து காப்பிய இரு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பீளமேடு பெரியமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி கார்த்தீஸ்வரி( 36). சம்பவத்தன்று மாலை காந்திமா நகர் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு இரவு வீடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது அதே வழித்தடத்தில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் இருந்தவர் கார்த்தீஸ்வரி அணிந்திருந்த நகையை பரித்து தப்பிச்சென்றனர். இச்சம்பவம் குறித்து கீர்த்தீஸ்வரி பீளமேடு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments