ஆனைமலை அண்ணாநகரில் நடிகர் விவேக் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடல் ..!!

   -MMH 

 பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு மனிதனுக்கும் ஆக்ஸிஜனை தருவது மரங்கள் இந்த மரங்கள் ஒவ்வொருவருக்கும் அன்னையாகத் திகழ்கிறது. எனவே மரக்கன்றுகளை வைத்து  இயற்கையை காப்போம். என்று இளைஞர் இடையே பறைசாற்றிக் சென்றவர் சமூக சேவகரும் நடிகரும் விவேக். இவரின் கூற்று இன்றளவும் இளைஞர் இடையே பசுமரத்து ஆணி போல  ஆழமாக பதிந்துள்ளது. 

எனவே நடிகர் விவேக் அவர்களின் நினைவு நாளில் இன்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கோவை மாவட்டம் ஆனைமலை அண்ணாநகரில் உள்ள KGN பிரண்ட்ஸ் கார்டனில்  ஏப்ரல் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று ஆனைமலை ஆலம் விழுது குழு  இளைஞர்கள் சார்பாக மரக்கன்றுகளை நட்டு வைத்து நடிகர் விவேக் அவர்களின் திருவுருவப் படத்திற்கு  மரியாதை செலுத்தினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக  

-அலாவுதீன் ஆனைமலை.  

Comments